29.4 C
Jaffna
September 23, 2021
விளையாட்டு

உலகக்கிண்ண ரி20 தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி ஆண்கள் ரி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த அணியில் 2016 ரி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸின் ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசி, கிண்ணத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்த பிராத்வைட் இடம்பெறவில்லை.

இருப்பினும், 36 வயதான ராம்போல் ஆறு வருடங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக்கில் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்த ரோஸ்டன் சேஸ், முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் ரி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி

கெரான் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன் (உப தலைவர்), ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ஓபேட் மெக்காய், லென்டல் சிம்மன்ஸ், ரவி ராம்போல், ஆண்ட்ரே ரசல், ஓஷேன் தோமஸ், ஹேடன் வோல்ஷ். மேலதிக வீரர்களாக- டரன் பிராவோ, ஷெல்டன் கோட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன் இணைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!

divya divya

எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாது!

Pagetamil

வரலாற்றில் ஒருத்தி: 200 மீட்டரிலும் தங்கம் வென்றார் எலைன் தொம்சன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!