27.5 C
Jaffna
August 9, 2022
இலங்கை

வவுனியாவில் ஒரு கிராமத்தில் 43 பேருக்கு தொற்று!

வவுனியா, சாந்தசோலை கிராமம் கோவிட் தொற்று காரணமாக அபாய நிலையை அடைந்துள்ளதுடன் கிராமத்தில் 43 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் கோவிட் தொற்று அபாயம் இருப்பதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக சுகாதார பிரிவினரால் கடந்த சனிக்கிழமை (04.09) சாந்தசோலை கிராமத்தில் அன்டிஜன் மற்றும் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நோய் அறிகுறி காணப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (08) இரவு வெளியாகின. அதில் 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கிராமத்தில் 43 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கோவிட் அபாயமுள்ள கிராமாக குறித்த கிராமம் காணப்படுவதால் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்றைய (2) அமைச்சரவை கூட்ட முடிவுகள்!

Pagetamil

குருநகர் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா: உறவினர்கள் கொந்தளிப்பால் வைத்தியசாலையில் பரபரப்பு!

Pagetamil

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!