பிரசவ வலி ஏற்பட்ட இளம் தாயை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி வழங்கப்படாத நிலையில், முச்சக்கர வண்டியில்அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டிக்குள் வைத்தே அந்தப் பெண் குழுந்தையை பிரசவித்துள்ளார். எனினும், குழந்தை உயிரிழந்து விட்டது.
பூண்டுலோயாவில் இந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டுலோயா, சீன் தோட்ட மக்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீன் தோட்டத்தை சேர்ந்த இளம் கர்ப்பிணியொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நோயாளர் காவு வண்டியை வழங்குமாறு, தோட்ட குடும்பநல உத்தியோகத்தரிடம் கோரியுள்ளனர்.
நோயாளர் காவு வண்டி பழுதடைந்து விட்டது, முச்சக்கர வண்டியில் கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் என குடும்பநல உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
முச்சக்கர வண்டியில் கர்ப்பிணி அழைத்துச் செல்லப்படும் போது, வழியிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும், சிசு இறந்த நிலையில் பிரசவமானது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சீன் தோட்ட மக்கள், தோட்டத்தின் குடும்பநல உத்தியோகத்தரையும் நலன்புரி உத்தியோகத்தரையும் இடமாற்றம்செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.