Pagetamil
சினிமா

‘படுக்கையறை வீடியோவில் என்னுடனிருந்தவர் அண்ணா’: லொஸ்லியா விளக்கம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார் லொஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் லொஸ்லியாவிற்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள்.

அந்த சீசனில் லொஸ்லியா, கவின், முகேன் தர்ஷன், சாண்டி உள்ளிட்ட அனைவரும் இணைந்து பிக்பாஸ் வீட்டில் பாடல்கள் பாடுவது, மற்றவரை போல் மிமிக்ரி செய்து பேசுவது, நடனமாடுவது என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர்களாக மாறினார். இவர்கள் ஐந்து பேருக்கு மட்டும் அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இறுதி வரை இவர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் லொஸ்லியாவுக்கு ஓரிரு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் லொஸ்லியா இணைந்து நடித்திருக்கும் பிரண்ட்ஷிப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனையடுத்து மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வாலிபரான தர்ஷன் உடன் இணைந்து லொஸ்லியா நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் தர்சன் மற்றும் லொஸ்ஸியா இடையே மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனை பார்த்த சிலர் பிக்பாஸ் இல்லத்தில் அண்ணன் தங்கையாக பழகி வந்த நிலையில், தர்ஷனுடன் இதுபோன்ற காட்சிகளில் எப்படி நடிக்க முடிந்தது என லொஸ்லியாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் லொஸ்லியா மற்றும் தர்ஷனின் படுக்கை அறை காட்சிகளை வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், நடிகை லொஸ்லியா விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லொஸ்லியா, “தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே. யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜவாழ்க்கையில் ஒப்பிடாதீர்கள். அந்தக் காட்சி எடுக்கப்பட்ட போது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்பு மட்டுமே” என கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

பெப்சி அலுவலகத்தில் நடிகை சோனா தர்ணா

Pagetamil

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார்!

Pagetamil

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

Leave a Comment