இலங்கை

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி திங்கள் முதல் செலுத்தப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை திங்கள் முதல் இடம்பெறவுள்ளது என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்வர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 65 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கரைச்சியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, புனித தெரேசா மகாவித்தியாலயம், உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயத்திலும்

கண்டாவளையில் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், புன்னைநீராவி அ.த.க.பாடசாலை, பிரமந்தனாறு கிராமசேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க.பாடசாலை, முருகானந்தா ம.வி., பரந்தன் கிராமசேவையாளர் அலுவலகத்திலும்

பூநகரியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலையில்

பச்சிலைப்பள்ளியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பளை மத்திய கல்லூரி. ஆகிய இடங்களில் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் பொது மக்கள் ஒரிடத்தில் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்பதற்காகவே மாவட்டத்தின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் தடுப்பூசி அட்டையினை பயன்படுத்தி பயணிக்க முடியும் எனத் தெரிவித்தார் வைத்தியர் நிமால் அருமைநாதன்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ரணில் மந்திரவாதியல்ல; ஆனாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்: தமிழ் தேசிய கூட்டமைப்பு புகழாரம்!

Pagetamil

புத்தளம் எம்.பி சனத் நிஷாந்தவிற்கு சொந்தமான கட்டிடம் தீக்கிரை!

Pagetamil

பிள்ளைகளிற்கு தொலைபேசி கொடுக்காதீர்கள்; கேமுக்கு அடிமையான ஒரே மகனை பறிகொடுத்த பெற்றோர் கதறல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!