டெல்லியில் 21 வயதே ஆன ஒரு காவல்துறை பெண் அதிகாரி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனதாக கூறப்படுகிறது, ஆனால் காவல்துறை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் #justiceforsabiya, #justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் நீதிக்கேட்டு போராடிவருகின்றனர்.
பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களே ஆன அந்த பெண் காவல் அதிகாரி, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உடலில் குறைந்தபட்சம் 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாகவும், மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.