அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 176 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து பதிவான அதிகபட்ச நாளாந்த தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
டெல்டா தொற்று மிகவும் வேகமாகப் பரவுவதால் அதைச் சமூகத்திலிருந்து முற்றிலும் நீக்குவது சாத்தியமல்ல என்று மாநில முதல்வர் டானியல் ஆண்ட்ரூஸ் கூறினார்.
16 வயதிற்கு மேற்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றார் அவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1