ஆப்கானிஸ்தானின் உயர்் தலைவராக தலிபான் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவை நியமித்து, ஈரானை ஒத்த ஆட்சிமுறையை தலிபான்கள் வடிவமைக்கின்றனர் என்று சிஎன்என்-நியூஸ் 18 செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானில் ஜனாதிபதி அமைச்சரவையை செயற்பட்டாலும், கொள்கை ஆணையிடும் அதிகாரம் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் மத அதிகாரமே உச்ச தலைவர் ஆவார். சட்டங்களை ரத்து செய்யவும் ஜனாதிபதியை மீறவும், நாட்டின் அனைத்து விஷயங்களிலும் இறுதி முடிவை எடுக்கவும் அவரே அதிகாரத்தை கொண்டிருப்பார்.
தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா ஒருபோதும் வெளிப்படையாகத் தோன்றாதவர். அவர் எங்கு இருக்கிறார் என்பது பெரும்பாலும் மர்மமாகவே இருக்கும்.
11 முதல் 72 வரையிலான உறுப்பினர்களை கொண்ட மேல் சபைக்கு அவர் தலைமை தாங்குவார் என்று CNN-News18 தெரிவித்துள்ளது.
2016 முதல் தலிபான்களை வழிநடத்திய அகுந்த்சடா பெரும்பாலும் கந்தஹாரில் இருந்து வேலை செய்வார் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
கந்தஹாரிலேயே தலிபான் அமைப்பு தோன்றியது. கடந்த அரசாங்கத்தையும் கந்தஹாரிலிருந்தே நடத்தியிருந்தனர்.
அகுந்த்சடா ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். “அவர் கந்தஹாரில் இருக்கிறார், ஆரம்பத்தில் இருந்தே அங்கு வசித்து வருகிறார்” என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார்.
அடுத்த வாரத்திற்குள் தமது அரசாங்கம் அறிவிக்கப்படுமென தலிபான்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.