25.8 C
Jaffna
January 31, 2023
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை முழுமையாக வெளியேறியது: தலிபான்கள் சுதந்திர பிரகடனம்!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதைத் தொடர்ந்து ஆப்கனுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க, நேட்டோ படைகள் நடத்தி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடந்த மீட்புத் தி்ட்டத்தில்  அமெரிக்க மக்கள், வெளிநாட்டவர்கள், ஆப்கன் மக்கள் என 120,000 இற்கும் அதிகமானவர்கள் வெளியேறினர். கொடூரமான தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி ஆப்கனிஸ்தான் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே இடம் பெயர்வைத் தொடங்கினர்.

இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓகஸ்ட் 31ஆம் திகதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க இராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து இன்று வெளிேயறியது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி செய்தார். இதையடுத்து, ஆப்கனுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் கூறுகையில் “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்டன. ஆப்கனுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

அமெரிக்க மத்திய கட்டளை பீட தளபதி ஜெனரல் பிராங்க் மெக்கென்சி செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவ பிரசன்னம் முடிவடைந்ததை உறுதிசெய்து, கடைசி அமெரிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் பெண்களுடன் கடைசி விமானம் ஓகஸ்ட் 30 திங்கள் இரவு காபூலில் இருந்து புறப்பட்டதாக கூறினார்.

காபூல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்த தலிபான் வீரர் ஹேமந்த் ஷெர்சாத் கூறுகையில் “காபூலில் இருந்து அமெரிக்காவின் கடைசி 5 விமானங்களும் வெளியேறி விட்டன. என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. 20 ஆண்டுகள் தியாகத்துக்கு பலன் கிடைத்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலில்ஜாத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ஆப்கானிஸ்தானுடன் எங்களின் 20 ஆண்டு போர் முடிந்தது. எங்களின் வீரமிக்க வீரர்கள், கப்பற்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள், தரைப்படையினர் செய்த தியாகம் முடிவுக்கு வந்தது. அனைவருக்கும் மரியாதையுடன் நன்றி தெரிவிக்கிறோம்.

கடைசி அமெரிக்க வீரர் வெளியேறிய காட்சி

இனிமேல் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கரங்களுக்குச் சென்றுவிட்டது. அவர்களின் பாதையை, இறையான்மையை அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்கள் நடத்திய போரையும் முடிக்கவும் இது நல்ல வாய்ப்பு. தேசத்தை தலிபான்கள் நடத்த வேண்டும் என்பதால் மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது.

தலிபான்கள் தேசத்தை பாதுகாப்பாக, வழிநடத்துவார்களா மக்களை பாதுகாப்பார்களா , நல்ல எதிர்காலத்தை தேசத்துக்கு வழங்குவார்களா என்பது தெரிந்துவிடும். அழகு, சக்தி, பல்வேறு கலாச்சார்கள், வரலாற்றுப்புகழ் ,பாரம்பரியத்தை கொண்டதேசமாக உலகிற்கு வெளிப்படுத்த முடியுமா? “எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 வருட இராணுவ இருப்பு முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து ஓகஸ்ட் 31 க்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகிறது. கடந்த 17 நாட்களில் எங்கள் இராணுவ, விமான படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி சுமார் 1,20,000 அமெரிக்க குடிமக்கள், நட்புநாடுகளின் குடிமக்கள், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் நட்புறவாளர்கள் முதலியவர்களை வெளியேற்றின” என்றார்.

மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவர்களுக்கு தாலிபன்கள் அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக மன்னிப்பு கோருகிறேன்; அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்: மைத்திரிபால சிறிசேன!

Pagetamil

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 61 பேர் பலி: சகோதரரின் மரணத்திற்கு பழிவாங்கும் தாக்குதலாம்!

Pagetamil

ஆணுறைக்குள் வாழைப்பழம்: இளைஞர் விபரீத செயல்!

Pagetamil

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 90 பேர் காயம்

Pagetamil

ஏவுகணை தாக்குதலில் ஒரு நிமிடத்தில் கொன்றுவிடுவேன் என புடின் மிரட்டினார்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!