உலகம்

சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம்: தேடப்படும் பெண்ணின் விபரத்தை வெளியிட்ட ரொரண்டோ பொலிசார்!

கனடாவின் ரொரண்டொ நகரத்தில் சூட்கேசில் பெண்ணொருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்படும் பெண்ணின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை சடலம் மீட்கப்பட்டது. மேற்கு முனையில் கீலே தெரு மற்றும் ஹிலாரி அவென்யூ அருகே ஒரு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டிருந்தனர்.

காலிடனைச் சேர்ந்த 41 வயது வர்ஷா கஜூலா என்பவரே கொல்லப்பட்டிருந்தார்.

கரிட்டா ஜக்சன்

கொலையுடன் தொடர்புடைய இரண்டு ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்புடைய மேலுமொரு பெண்ணை தேடி வருகின்றனர். கரிட்டா ஜக்சன் என்ற அந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தவர்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நைஜீரிய சிறையுடைத்து 1800 கைதிகள் விடுவிப்பு!

Pagetamil

73ஆண்டுகள் தாமதமாக நூலகத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தகம்!

Pagetamil

நள்ளிரவில் நேபாள நாடாளுமன்றம் கலைப்பு : நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!