31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

இதுவரை 32 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை 32 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இன்று ஊடக சந்திப்பின் போது, 900 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.

சுமார் 75 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிப் பெண்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடவும், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும்  அவர் கேட்டுக் கொண்டார்.

4,200 கர்ப்பிணிப் பெண்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறு கணிசமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment