Site icon Pagetamil

வவுனியாவில் கோவிட் தொற்றால் மேலும் மூவர் மரணம்: ஒரே நாளில் மரணமடைந்தோர் 7 ஆக உயர்வு!

வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கற்குளம் படிவம் மூன்று பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த 45 வயது நபருக்கு பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவிட் விடுதியில் சிகிச்சை பெறச்று வந்த உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்திருந்தார். தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர், வைரவபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 76 வயது நபர் ஆகியோரும் வீட்டில் மரணமடைந்திருந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததது.

இதன்படி வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கோவிட் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version