26.3 C
Jaffna
March 23, 2023
விளையாட்டு

நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று வரலாறு படைத்தார்.இவர், இந்திய ராணுவத்தில் சுபேதராக பணிபுரிகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருண்தீப் ராய், பிரவிண் ஜாதவ் (வில்வித்தை), அமித் பங்கல், மணிஷ் கவுசிக், சதீஷ் குமார் (மல்யுத்தம்), தீபக் புனியா, அர்ஜுன் லால், அரவிந்த் சிங், விஷ்ணு சரவணன் (படகு) என ராணுவ வீரர்களுக்கு நேற்று புனேயில் பாராட்டு விழா நடந்தது. ராணுவ தலைமை தளபதி நரவானே, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி பரிசளிக்கப்பட்டது. இங்குள்ள ராணுவ விளையாட்டு மையத்துக்கு நீரஜ் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் கூறுகையில்,”விளையாட்டு வளர்ச்சிக்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளோம். இது இந்திய நட்சத்திரங்களுக்கும் தெரியும். பிரதமர் மோடி அனைத்து விளையாட்டுகளுக்கும் ஊக்கம் அளிக்கிறார். ஒலிம்பிக் போட்டி நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். அந்தத் தருணத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சென்னையிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Pagetamil

முஷ்பிகுர் ரஹீமின் அதிவேக ஒருநாள் சதம்!

Pagetamil

டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் அல்கராஸ்

Pagetamil

யாழ் வீரர் வியாஸ்காந்திற்கு ஐ.பி.எல் வாய்ப்பு: ராஜஸ்தான் ரோயல்ஸ் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டார்!

Pagetamil

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!