29.4 C
Jaffna
September 23, 2021
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (27.8.2021- 02.9.2021)

 


சூரியன், புதன், குரு சாதக நிலையில் உள்ளனர்.

முருகன் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். யோகமான வாரம். தடைகள் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உழைப்பால் உயர்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

பரணி: ஆற்றல் மிக்கவர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றிகள் உண்டு. வீணான மனக் குழப்பத்தை அகற்றுங்கள். உறவினர்களின் செயல் மகிழ்ச்சியளிக்கும்.

கார்த்திகை 1: திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வ பக்தி மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருங்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு.

தட்சிணாமூர்த்தி வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். வெளியூர் பயணமொன்று செல்ல நேரிடும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள்.

ரோகிணி: எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். மனதில் ஓரத்தில் சிறு மனக்குறை இருக்கும். நண்பர்களின் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: வருமானம் உயரும். கடன் விவகாரங்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். வீடு, பணி மாற்றம் அவசியம் என்றால் அன்றி அதில் அவசரம் வேண்டாம். பெரிய மனிதர்களின் தொடர்பால் தகுதி உயரும்.

குரு, ராகு, கேது, புதன் நன்மை வழங்குவர்.

ராமர் வழிபாடு நன்மை தரும்.

மிருகசீரிடம் 3,4: நல்லவர்களைச் சந்திப்பால் நன்மை காண்பீர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடரும் வாய்ப்பு உருவாகும்.

திருவாதிரை: முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வருங்கால நலன் கருதி புதிய யோசனைகள் உருவாகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: பொறுமையோடு செயல்படுவீர்கள். சிறிய அளவில் தற்காலிகப் பணப்பற்றாக்குறை ஏற்படும். அக்கம் பக்கத்திலுள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

புதன், சூரியன், சந்திரன் அனுகூல பலனை தருவர். குருவாயூரப்பன் வழிபாடு துன்பம் போக்கும்.

புனர்பூசம் 4: பக்கபலமாக உள்ளவர்களின் பணத்தேவையை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். உங்களின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். சிலருக்கு விருது, பாராட்டு கிடைக்கக் கூடும்.

பூசம்: குடும்பத்தினர்களின் மனக்குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பாசமிக்க நபர் ஒருவரைச் சந்திப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வருவதற்கான வாய்ப்புண்டு.

ஆயில்யம்: வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். முகத்தில் பொலிவு கூடும். குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும். உங்களால் சுற்றியுள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பை விடக் குறையும். பாராட்டுக்கள் குவியும்.

குரு, புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர்.

முருகன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகம்: தொழில் போட்டிகள் விலகும். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு உண்டு. இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கைகூடும். பணத்தைப் பெருக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

பூரம்: கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். சொத்து விற்க எடுத்த முயற்சி தடங்கலுக்குப் பிறகு நகரும்.

உத்திரம்1: நெடுநாளைய பிரச்னை ஒன்று பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். சேமிக்க வாய்ப்புண்டு.

கேது, புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். சிவன் வழிபாடு வளம் தரும்.

உத்திரம் 2,3,4: கடன் பற்றிப் பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப விசேஷங்கள் உறுதியாகும்.

அஸ்தம்: தாய்வழி உறவினர்களால் பாசமும், உதவியும் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நோய்கள் நீங்கி உடல்நிலை சீராக இருக்கும்.

சித்திரை 1,2: கணவன், மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். காதல் வாழ்க்கை உற்சாகத்தைக் கொடுக்கும். பேச்சில் சுவாரஸ்யம் அதிரிக்கும். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

சந்திராஷ்டமம்: 27.8.2021 காலை 6:00 மணி – 29.8.2021 பகல் 11:55 மணி

குரு, சுக்கிரன், செவ்வாய், சூரியன் கூடுதல் நற்பலன் தருவர்

நாராயணன் வழிபாடு நன்மை அளிக்கும்.

சித்திரை 3,4: எதிரிகளின் தொல்லை சங்கடம் அளிக்கும். ஆனால் செவ்வாயால் உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்துங்கள்.

சுவாதி: எந்த ஒரு விஷயத்திலும், செயல்பாடுகளிலும் எச்சரிக்கை உணர்வு அவசியம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவர்.

விசாகம் 1,2,3: காதலில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம். பேச்சால் பிறர் வருந்தும் நிலை ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தவறான பாதைக்கு அழைக்கும் நண்பர்களை விட்டு அறவே விலகுங்கள்.

சந்திராஷ்டமம்: 29.8.2021 பகல்11:56 மணி- 31.8.2021 இரவு11:39 மணி

சூரியன், குரு, புதன் நல்ல பலனைத் தருவர்.

விநாயகர் வழிபாடு வளம் தரும்.

விசாகம் 4: வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வதற்கு நாள் பார்ப்பீர்கள். வண்டி, வாகனம் வாங்குவீர்கள். மனதில் சுறுசுறுப்பு குடியேறும். மற்றவர் விஷயத்தில் தலையிடுவது அவசியமா என யோசித்து செயல்படுங்கள்.

அனுஷம்: நன்றி மறந்த நட்புகளை நினைத்து வருந்த வேண்டாம். நியாயம் உங்கள் பக்கம் உள்ளது. பதவியில் இருப்பவர்களிடம் கவனமாக இருங்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

கேட்டை: யோகம் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சு, செயல்களில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 31.8.2021 இரவு11:40 மணி- 3.9.2021 இரவு10:19 மணி

சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு நலம் தரும்.

மூலம்: சிறு சிறு முயற்சிகளில் ஒன்றிரண்டு கைகூடும். மனதில் காரணம் புரியாத மகிழ்ச்சி தாண்டவமாடும். குடும்பத்தினரால் கூடுதல் நன்மை கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

பூராடம்: பார்க்க விரும்பிய ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் நிம்மதி காண்பீர்கள். வீண் கற்பனை பயத்தை தவிருங்கள்.

உத்திராடம் 1: எதிர்பார்க்கும் விஷயங்கள் தடையின்றி நடக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து மோதல் நீங்கும்.

புதன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். அனுமன் வழிபாடு அல்லல் போக்கும்.

உத்திராடம் 2,3,4: சட்டதிட்டங்களுக்கு வளைந்து கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தினரின் செயலால் சந்தோஷங்களைச் சந்திப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் மனதில் நிலவும்.

திருவோணம் : தொழிலில் லாபம் சீராக வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. உறவினரிடமிருந்து இனிக்கும் செய்தி வரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அவிட்டம் 1,2: பணியில் கூடுதல் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்படும். உடலில் உபாதை ஒன்று வந்து நீங்கும். மதிக்கும் நபர் ஒருவர் தேடி வருவார்.

புதன், சுக்கிரன், குரு பார்வையால் அளப்பரிய நன்மை கிடைக்கும் துர்கை வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: சந்ததி வரவால் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.

சதயம்: பேச்சில் நிதானம் தேவை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டிவரும். மனசில் இருந்த கற்பனை பயம் மறையும். வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை.

பூரட்டாதி 1,2,3: அரசாங்க விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. எதிலும் பொறுமையுடன் செயல்படுங்கள். பத்திரம், நகைகளை பாதுகாப்பாக கையாளுங்கள்.

சுக்கிரன், புதன், சனி அதிர்ஷ்ட பலன்கள் வழங்குபவர். குரு வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படுகிறது. அலைபேசி வழியில் வரும் தகவல் நிலையான வருமானத்தை தேடித் தரும். உழைத்ததற்கு உடனடி பலன்களை எதிர்பார்ப்பதற்கில்லை.

உத்திரட்டாதி: உழைப்பிற்கான பலன் தாமதமாக கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் கூடுதல் செலவு ஏற்படும். குடும்ப நலனுக்காக அதிக நேரம் செலவழிப்பீர்கள்.

ரேவதி: வீண் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு பாச பந்தமாக நடப்பர். நீங்கள் மதிக்கும் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்!

Pagetamil

சிவராத்திரி தோன்றக் காரணம்

Pagetamil

வீட்டு விஷேசங்களின் போது மாவிலை கட்டுவது ஏன் தெரியுமா?

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!