எகிப்தில் 43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 4 கால்கள் கொண்ட திமிங்கில வகையின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான புதைபடிவமொன்று கண்டறியப்பட்டிருக்கவில்லை.
ஃபியோமிசெட்டஸ் அனுபிஸ் (Phiomicetus anubis) என்ற அந்தத் திமிங்கில வகையின் புதைபடிவங்கள், எகிப்தின் மேற்குப் பாலைவனத்தில், ஈசோன் பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதி தற்போது பாலைவனமாக இருந்தாலும், ஒருகாலத்தில் அந்தப்பகுதி கடலாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய கண்டுபிடிப்பு, திமிங்கிலங்கள் நிலத்தில் இருந்து கடலுக்கு சென்ற உயிரினமா என்ற ஆராய்ச்சியாளர்களின் தேடலிற்கு பயனுள்ளதாக அமையும். ஃபியோமிசெட்டஸ் அனுபிஸ் வகை திமிங்கிலங்களின் பரிமாண வளர்ச்சியில் தரைக்கும், கடலுக்கும் இடையிலான கட்டத்தை குறிக்கிறது.
மீட்கப்பட்ட புதைபடிவ திமிங்கிலம் சுமார் 600 கிலோகிராம் எடைம், 3 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகை திமிங்கிலங்கள் சிறந்த வேட்டையாடும் உயிரினம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன் பகுதி எலும்புக்கூடு ஆபிரிக்காவிலிருந்து அறியப்பட்ட மிகவும் பழமையான புரோட்டோசெடிட் திமிங்கலங்களின் மாதிரிகளை ஒத்துள்ளது.
