Site icon Pagetamil

நீல மாணிக்கக்கல் சுவிற்சர்லாந்து கொண்டு செல்லப்பட்டது!

இரத்தினபுரி, பெல்மடுல்ல பகுதியில் உள்ள தனியார் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல் பாதுகாப்பாக சுவிற்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நீல மாணிக்கம் ஒரு சான்றிதழைப் பெறுவதற்காக சுவிற்சர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை கூறினார்.

சுவிற்சர்லாந்தில் உள்ள இரத்தின ஆய்வகத்தில் முழுமையாக பரிசோதித்த பிறகு தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பின்னர் வெளிநாட்டு இரத்தினக்கல் ஏலத்தில் அதனை விற்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த இரத்தினக்கல் தொடர்பாக உலகின் பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், சீனாவில் நடக்கும் கண்காட்சியி் அதை விற்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

Exit mobile version