28.1 C
Jaffna
October 25, 2021
மருத்துவம்

உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற ஆயுர்வேத மருத்துவம்!

ஆயுர்வேத மருத்துவ முறையில் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது பக்கவிளைவுகள் இல்லாதது. உடலில் நச்சுகள் சேர சேர அவை ஆரோக்கியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். இதை எப்படி வெளியேற்றுவது ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

​உடல் நச்சுகள் என்றால் என்ன?

ஆயுர்வேதம் குணபடுத்தும் முறையின்படி, நமது இயல்பான ஆரோக்கியம் உடல் சமநிலை மற்றும் மன மகிழ்ச்சி ஆகும். நச்சு என்பது நமது உடல் மற்றும் மனதிற்குள் நுழைந்து இயல்பான நிலையில் சமநிலையின்மையை உருவாக்கி காலப்போக்கில் நோய்க்கு வழிவகுக்கிறது. நாம் நச்சுகளை வகைப்படுத்த இரண்டு முக்கிய ஆதாரங்கள் உள்ளன. உங்களது உணவு, தனிப்பட்ட பொருட்கள் மற்றும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பொருட்கள், சுவாசிக்கும் காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் பிற இடங்களில் காணப்படும் நச்சு. இரண்டாவது எதிர்மறை சிந்தனை முறைகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகும். சுயவிமர்சனம், நீண்ட நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் முழுமையாக மறக்காத வலிமிகுந்த அனுபவங்கள் போன்ற உணர்ச்சிகள் எல்லாமே மன அளவிலான நச்சுகள் ஆகும்.

​ஆயுர்வேத வழியை ஏன் தேர்வு செய்ய வேண்டும் ?

ஆயுர்வேதம் என்பது இயற்கையான செயல்முறையாகும். இந்த இயற்கை முறையால் நமது உடல் பக்கவிளைவுகள் ஏதும் எற்படாமல் சுத்தகரிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் நம்மை உஷ்ணமாக வைத்துக்கொள்ள வழக்கத்துக்கு சற்று அதிகமாக உணவு சாப்பிடுவதுண்டு. இந்த காலத்தில் நமது உடலில் இருந்து நச்சுத்தன்மை அகற்றுவது என்பது பெரிய சவாலாகும். ஆயுர்வேதத்தின் நச்சு நீக்கும் முறைகள் பல நூற்றாண்டுகளாகவே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

உடலில் நச்சுகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

உடல் பலுவாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் சோம்பல், ஒழுங்கற்ற அல்லது குறைவான அளவில் பசி இருப்பது, பொதுவான உடல் மற்றும் மூட்டு வலிகள், இந்த அறிகுறிகள் எல்லாம் இறைச்சி, சீஸ் இனிப்பு மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிட்ட மறுநாள் உண்டாகலாம், கறை, முகப்பரு போன்றவை ஏற்பட்டு தோல் பார்க்க மந்தமாக இருக்கும், வயிறு வீக்கம், வாயில் உலோகதன்மை கொண்ட சுவை, நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளி இருப்பது, உடலில் வாய்வு தேங்கியிருத்தல், மூச்சு மற்றும் வியர்வையில் துர்நாற்றம் வீசுதல். மலச்சிக்கல், துர்நாற்றம் வீற்றும் மலம், ஒட்டும் மலம் போன்றவை இருக்கலாம், மனம் தெளிவு மற்றும் ஆற்றல் இல்லாமல் இருப்பது. களைப்பு, எதிலும் ஆர்வமற்ற உணர்வு, வயிறு கால்கள் அல்லது உடல் முழுவதும் கனமாக உணர்வது, சைனஸ், மூச்சு விடுவதில் சிரமம் எற்படுவது, உடலில் தடைப்பட உணர்வு போன்றவை கூட உடலில் இருக்கும் நச்சுகளுக்கான அறிகுறிகள்.
அதே போன்று இரவில் நன்றாக தூங்கியும் மறுநாள் சோர்வை எதிர்கொண்டால் அதுவும் நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்.

​வீட்டிலேயே நச்சு நீக்கும் எளிய வழிகள்:

உணவு மற்றும் டயட்:

நச்சுகளை நீக்கும் போது உணவில் குளிர்ந்த பானங்கள், அதிகப்படியான ஆல்கஹால், காஃபின், புகை பிடிக்கும் பழக்கம், அதிகமாக பால் பொருட்களை சாப்பிடுதல், அதிக இனிப்பு பழங்கள், உணவுகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைத் தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு பொருட்கள், பழைய உணவு, பதப்படுத்தபடும் உணவு, மைக்ரோ ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், ஊறுகாய் மற்றும் வினிகர் உட்பட புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்துமல்லி, கடுகு விதைகள் போன்ற மூலிகை மற்றும் அதிக மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். ஆமணக்கு எண்னெய் சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் நல்ல பயனை தரும். கசப்பான உணவு. இலேசான காரம் சேர்க்கபட்ட உணவுகள், துவர்ப்பான உனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மூலிகை தேநீர் குடிப்பதும் நல்ல பலனைத் தரும்.வேகவைத்த காய்கறி, சூப் வகைகள் தவிர்க்காமல் எடுக்க வேண்டும்.

நச்சுகளை அகற்றும்போது உணவுகள்

பருப்பு சூப், காய்கறி சூப் வகைகள், வேகவைத்த கேரட், சுரைக்காய், அஸ்பராகஸ், முளைகள், முட்டைக்கோஸ், இலேசாக வேகவைத்த கீரை வகைகள், பாசுமதி அரிசி, தினை மற்றும் பார்லி வகைகள, இஞ்சி, சீரகம், கொத்துமல்லி மற்றும் பெருஞ்சீரகம் போன்ற மசாலா வகைகள், ஆளி விதைகள், எள் விதைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள். ஒவ்வொரு உணவிலும் ஆறுவிதமான சுவைகளும் சேரவேண்டும். நச்சுத்தன்மையின் போது நீங்கள் திருப்திகரமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது உறுதி செய்வது அவசியம்.

​உணவை உட்கொள்ளும் நேரம்:

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும். பகலில் கபம் உண்டாகும் காலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை . இந்த நேரத்தில் உடலில் நச்சுக்களை அதிகரிக்கும். இந்த மாதிரியான நேரத்தில் உண்வு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. இதை செய்ய முடியாதென்றால் உடலில் உள்ள கபத்தை குறைக்க உதவும் உணவில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில் குளிர்ந்த உணவு பொருட்கள் இனிப்பு உணவுகள், பிரட், வெண்ணெய், சீஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இஞ்சி உலர்திராட்சை பாகு!

divya divya

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Pagetamil

சரும பிரச்சனை முதல் மூல நோய் பிரச்சனை வரை அனைத்திற்கும் சாப்பிட வேண்டிய பழம் இது!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!