29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

60 வயதுக்கு மெற்பட்டவர்களிற்கு வீடு சென்றே தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பமானது. அனைவருக்கும் தடுப்பூசி எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த நடமாடும் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவத்தினரும், சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து மேற்கொள்ளும் குறித்த வேலைத்திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு அமைவாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் 57வது படைப்பிரிவு தலைமையகம் முன்பாக ஆரம்பமானது. முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய, 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் HMHN கேரத், 571வது படைப்பிரிவின் அதிகாரி மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், இராணுவ அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் குறித்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். விசேடமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கான தடுப்பூசிகள் செலுத்தவுள்ளோம். இந்த பிரதேசங்களில் உள்ள எமது தாய் தந்தையர்களிற்கு அவர்களின் வீடுகளிற்கு சென்று குறித்த தடுப்பூசியை வழங்கவுள்ளோம்.

ஜனாதிபதியின் பணிப்பிற்கமைவாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யுமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கு அமைவாக இன்று இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிடட அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அ்த வகையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்க மேற்பட்ட தாய் தந்தையர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்வோம் என நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment