ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் பேயாக நடித்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி (24) வடக்கு கோவாவின் சியோலிமில் உள்ள ஆக்சலில் தனது வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த இவர் மொடலிங், திரைப்படத்துறையில் பணியாற்றுவதால் இந்தியாவில் தங்கியிருக்கிறார்.
எனினும், அவரது மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு வழக்கு விவகார சமூக ஊடக பதிவுகளிற்கும் தொடர்பிருப்பதாப தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை அலெக்ஸாண்ட்ராவின் ஆண் நண்பர் அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1
1