தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகில் நீடித்து முன்னணி நட்சத்திரமாகஉள்ளார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் சற்று தடுமாறிய நடிகை த்ரிஷா, 96 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி வந்ததால் தற்போது த்ரிஷா முன்னணி நடிகை இடத்திலிருந்து சற்று கீழே இறங்கி உள்ளார். இவருக்கு பின்னால் வந்த நடிகைகள் த்ரிஷாவின் இடத்தை பிடித்து விட்டனர். தற்போது த்ரிஷா கைவசம் தமிழில் 4 படங்களும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படங்களும் என 6 படங்கள் உள்ளன.இப்படங்கள் வெளிவந்தால் மட்டுமே த்ரிஷாவின் மார்க்கெட் நிலைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
இந்நிலையில் தற்போது 38 வயதாகும் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். ஆனால் நடிகை திரிஷாவோ, “நான் திருமணம் செய்தால் காதல் திருமணம்தான் செய்வேன்” என அடம் பிடித்து வருகிறாராம். இந்த வயதில் காதல் திருமணமா என குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.