தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது அலை தீவிரமடைந்தது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானதால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்களுடனான ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து புதிய தளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிகுறி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் 23.08.2021 முதல் திரையரங்குகள் இயங்குகிறது. திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.