27.6 C
Jaffna
March 29, 2024
லைவ் ஸ்டைல்

புதுமண தம்பதியர் ஹனிமூன் சென்றால் வாழ்க்கை முழுமை அடையுமாம்!

புதுமண தம்பதியர் ஹனிமூன் சென்றால் வாழ்க்கை முழுமையும் தாம்பத்தியம் சிறக்கும் ஏன் தெரியுமா?

திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இருவருக்கும் தனிமை தேவை. அதற்கு தான் தேனிலவு என்னும் பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருந்தார்கள்.

இந்த பழக்கத்தால் யாருடைய தொல்லையும் இன்றி இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். தாம்பத்தியத்தை நெருக்கமாக்க உடல் மட்டுமே போதுமானதாக இருக்காது. மனமும் நெருக்கத்தை உணர வேண்டும். தேனிலவு மூலம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் நெருக்கம் அதிகரிக்கவும் இவை உதவலாம். இந்த ஹனிமூன் செல்வதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாட்கள் முதல் திருமணக்காலம் வரை ஆண் பெண் இருவருமே கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும். அதை போக்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்குவது இந்த தேனிலவு வழியாகத்தான்.குறிப்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அந்த தம்பதியருக்கு இந்த தேனிலவு சிறந்த பிரேக்கராக செயல்படுகிறது.

ஹனிமூன் மகிழ்ச்சி

தம்பதியரைப் பொறுத்தவரை ஹனிமூன் என்பது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் இயற்கை சூழ்ந்த ரம்மியமான இடங்கள் என்று மனதில் பதிந்துவிட்டன. ஆனால் தேனிலவு என்பது அருகில் இருக்கும் இடங்களுக்கும் செல்லலாம். உங்களுக்கு தேவை யாருமில்லாத தனிமை அவ்வளவே. திருமணத்துக்கு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள இந்த தேனிலவு.

பிடித்த விஷயங்களால் நெருக்கம்

தயக்கமோ வெட்கமோ இருந்தாலும் நீண்ட நேரம் அப்படியே இருக்கமாட்டீர்கள். பிடித்த விஷயங்கள் குறித்து உங்கள் பேச்சை தொடங்கலாம். ரம்மியமான சூழலில் ஒருவருக்கு பிடித்த உணவு, பிடித்த புத்தகம், பிடித்த நடிகர் இப்படியான கேள்விகளில் தொடங்கி குடும்ப உறவுகள் வரை விவாதிக்கலாம்.

இனிமையான நினைவுகள் தரும்

தேனிலவு என்பது எப்போதுமே இருவருக்குமே இனிமையான நினைவாக இருக்கும். வாழ்க்கையில் சில வருடங்கள் தொடங்கி வாழ்க்கை முழுவதுமே அழகான நினைவாக இருக்கும். தம்பதியருக்கு வரும் கருத்து வேறுபாடுகள் கூட இந்த தேனிலவு நினைவை ஒருவர் நினைவுபடுத்தினாலும் ஒன்றுமில்லாமல் போகலாம். உண்மையில் இனிமையான தேனிலவு வாழ்வு முழுமைக்கும் அவர்களுக்கு நெருக்கத்தை உண்டாக்கலாம்.

வெளிப்படையான பேச்சும் செய்கையும் இருவரது ரசனையும் இணைந்த பிறகு தாம்பத்யமும் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிதலில் இனி கணவன் தன்னை எங்கேயும் விட்டுகொடுக்க மாட்டான் என்று மனைவியும், மனைவி இனி எங்கேயும் தன்னை விட்டுகொடுக்க மாட்டாள் என்ற கணவனும் உணரும் இந்த தருணத்தில் தாம்பத்தியமும் இனிமையாக இருக்கும். ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும் போது தாம்பத்தியமும் இனிமையாக மாறும்.

கணவன் மனைவி ஒருவரையொருவர் காயப்படுத்தி விட்டு தாம்பத்திய மட்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நிச்சயம் இனிமையான தாம்பத்தியத்தை எப்போதும் கொடுக்காது. அதே நேரம் இனிமையான தருணத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் இந்த மகிழ்வான தேனிலவு நிச்சயம் நல்ல தாம்பத்தியத்தை அளிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment