28.1 C
Jaffna
June 21, 2024
விளையாட்டு

ஐபிஎல் 2021: ஆர்சிபி அணியில் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர ஒப்பந்தம்!

ஐபிஎல் 2021 தொடரில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீரர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விராட் கோலி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்தியாவில் மே மாதம் கோவிட் -19 தொற்று அதிகரித்ததால் ஐபிஎல் 2021 காலவரையின்றி நிறுத்தப்பட்டது. அந்த போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அக்டோபர் 15 அன்று நடத்தப்படும்.

வனிந்து ஹசரங்க தற்போது உலக ரி 20 பந்துவீச்சு தரவரிசையில் 2 வது இடத்தில் உள்ளார். சமீர தனது கடைசி மூன்று தொடர்களில் அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் அவர்கள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளனர்.

ஐபிஎல் 2021 தொடரில் ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள்:

ஏபிடி வில்லியர்ஸ்
கிளின் மக்ஸ்வெல்
வனிந்து ஹசரங்க
துஷ்மந்த சமீர
டிம் டேவிட்
டான் கிறிஸ்டியன்
கைல் ஜெமிசன்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பால்கனியில் இருந்து விழுந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் உயிரிழப்பு

Pagetamil

நியூஸிலாந்து அணியின் கப்டன் பொறுப்பை துறந்த கேன் வில்லியம்சன்!

Pagetamil

Euro Cup | ஹங்கேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி!

Pagetamil

T20 WC | மேற்கு இந்தியத் தீவுகளை வென்ற இங்கிலாந்து: சால்ட், பேர்ஸ்டோ அசத்தல்

Pagetamil

Euro Cup | ஆஸ்திரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்

Pagetamil

Leave a Comment