ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ரெட்மி 10 பிரைம் விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. முன்னதாக ரெட்மி 10 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 10 பிரைம் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களின்படி ரெட்மி 10 பிரைம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படும் என கூறப்பட்டது. புதிய ரெட்மி 10 பிரைம் 2106119BI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 மற்றும் ப்ளூடூத் 5.2 வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்திலும் இடம்பெற்றது. ரெட்மி 10 பிரைம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி 10 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 பிரைம் இந்திய வெளியீடு குறித்து சியோமி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.