துபாயில் வசிக்கும், ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகாவுக்கு சொந்தமான, கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பேருந்தை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், இன்று (20) மாத்தறை மிட்டெனியவில் கைப்பற்றினர்.
மாத்தறையிலிருந்து கடுவெல செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சொகுசு பேருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 கைத்துப்பாக்கிகள், ர மகசீன்கள் மற்றும் 10 ரவைகளை போலீசார் கண்டுபிடித்தனர்.
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பல துப்பாக்கிகள் பற்றிய தகவல்களை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிகளும் பாகிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டவையே. கிடைத்த தகவலின் படி, தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த துப்பாக்கிகளும் ‘ஹரக்கட்டா’வுக்கு சொந்தமானவை என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர் என்று போலீஸ் போதைப்பொருள் பணியகம் கூறுகிறது.