அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் நடப்பில் உள்ள முடக்கநிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு பகுதி-ஊரடங்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்நகர், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது.
வெளியே செல்லும்போது, அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் அறிவித்துள்ளார்.
வெளிப்புற உடற்பயிற்சியில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஈடுபடலாம்.
வைரஸ் பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெரெஜிக்லியன் தெரிவித்தார்.
பலர் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவதாகவும் அவர் சொன்னார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிதாய் 644 பேருக்குக் வைரஸ் தொற்று உறுதியானது. அவர்களில் பெரும்பாலோர் சிட்னி நகரைச் சேர்ந்தவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1