இலங்கை

இன்று நாளொன்றின் அதிகபட்ச தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து, ஒரே நாளில் பதிவான அதிகபட்ச கொரோனா வைரஸ் தொற்று இன்று பதிவாகியது.

இன்று வரை 3,806 புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் பதிவாக மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 373,165 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 3,793 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த 12 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இன்று COVID-19 இலிருந்து குணமடைந்த 2,186 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 318,714 ஆக உயர்ந்தது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, 47,847 நபர்கள் தற்போது நாடு முழுவதும் பல மையங்களில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மன்னாரில் ஊரடங்கு ஒரு பக்கம்; வரிசை மறுபக்கம்!

Pagetamil

வெள்ளைப்பூண்டால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தொழிலதிபர்!

Pagetamil

கிளிநொச்சி புடவையகத்திற்குள் நுழைந்த டிப்பர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!