கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் கியாரா அத்வானி. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பரத் அனே நேனு படம் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு வந்தார். அதன் பிறகு ராம் சரணின் வினய விதேய ராமா தெலுங்கு படத்தில் நடித்தார். இந்நிலையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கியாரா அத்வானி.
தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தில் நடிக்க ரூ. 5 கோடி கேட்டாராம் கியாரா. பரத் அனே நேனு படத்திற்கு கியாராவுக்கு ரூ. 80 லட்சம் தான் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர் மூன்றாவது தெலுங்கு படத்திலேயே ரூ. 5 கோடி கேட்கவே தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். ரூ. 5 கோடி எல்லாம் கொடுக்க முடியாது என்று தில் ராஜு தெரிவித்துவிட்டாராம். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி ரூ. 4.5 கோடிக்கு கியாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் கியாரா அத்வானி தான் ஹீரோயின். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிறகே கியாரா தன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. ராம் சரண், ஷங்கர் கூட்டணி சேரும் படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. அந்த படத்தை தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதை மனதில் வைத்து தான் கியாரா ரூ. 5 கோடி கேட்டாராம்.
ராம் சரண்-ஷங்கர் படம் தில் ராஜுவுக்கு மிகவும் முக்கியமானது. இது அவர் தயாரிக்கும் 15வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை 4 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இந்த படத்தில் என்ன புதுமையை காட்டவிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.