செஞ்சோலை படுகொலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்று காலை சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
காலையிலிருந்தே எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தின் முன் இராணுவத்தினர் கடமையில் இருந்தனர்.
எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்த வந்த போது, இரண்டு இராணுவத்தினரும் தடையேற்படுத்த முயன்றனர். தமது மேலதிகாரி வந்த பின்னரே அஞ்சலி செய்யலாமென்றனர்.
எனினும், அதை பொருட்படுத்தாமல் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஊடகங்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்த போது, இராணுவ அதிகாரி சகிதம் மேலதிக இராணுவத்தினர் வந்தனர்.
அங்கு சூடான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றது.
பதாதையை தாம் கொண்டு செல்லப் போவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். எனினும், அதை வழங்க முடியாதென சிவாஜிலிங்கம் தம்முடன் எடுத்துக் கொண்டார்.
நினைவு நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர் ஒருவரிடம் இராணுவத்தினர் வீடியோ பதிவை கோரினர். இதனால்
புதுக்குடியிருப்பு- வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்கொண்ட விமான குண்டு வீச்சில் 53 மாணவிகளும் 7 பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பாடசாலை உயர்தர மாணவர்கள் அங்கு அழைக்கப்பட்டு ஆரம்பப் பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.