மஹாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று காரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில
தலைநகர் மும்பையைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் மாநிலத்தில் உயிரிழந்த முதல் நபர் ஆவார். ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்த வயது முதியவர், ரத்தினகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஆகியோர் டெல்டா பிளஸ் வகை தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.