உதவி செய்யுங்க என கண்ணீர் மல்க பேசிய கர்ணன் படப் பாடலை பாடிய பாட்டி.

Date:

தனுஷ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் பிரபலமானவர் மாரியம்மாள். சிவகங்கை மாவட்டம் கிடக்குழி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள். அதனாலேயே, அவரது பெயர் கிடக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறார்.

மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். தென் மாவட்டங்களில் மாரியம்மாளின் நாட்டுப்புற பாடல்கள் பிரபலம். தமிழ் சினிமாவில், வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் மகளுக்கு திருமணமாகி பேரன் பிறந்த நிலையில், மருமகனும் காலமானார். மகள், பேரனுடன் தனியாக வசித்து வந்தார். மாரியம்மாள் பேரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கான சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் கர்ணன் படத்தில் தற்போது இவர் பிரபலமானார். ஆனால் சினிமாவில் இவர் பாடல் பாடிய படங்கள் பலவும் வெளியிடாமல் முடங்கியுள்ளன. இதனால் பணம் எதுவும் கைக்கு வரவில்லை. கையில் இருந்த பணமும் பேரனுக்கு சிகிச்சை பார்த்து கரைந்துவிட்டதால் சொந்தமாக இருந்த வீட்டையும் சிகிச்சைக்கு பணமில்லாமல் விற்றுவிட்டார். நோய், தொழில் நஷ்டம் என கடுமையன நிதி நெருக்கடியால் வாடும் அவர், கடந்த மூன்று மாதங்கள் வீட்டு வாடகை கூட கொடுக்கவில்லை. இன்னும் எத்தனை கஷ்டங்களை நான் தாங்குவேன், முடிந்தவர்கள் உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று ஒரு பேட்டியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்