28.9 C
Jaffna
June 26, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

ஆப்கானின் முக்கிய நகரங்கள் வரிசையாக வீழ்கின்றன: தலிபான்களிடம் நகரத்தை ஒப்படைத்த ஆளுனர் கைது!

ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரமான ஹெராத், தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தலிபான் பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பதினோராவது மாகாண தலைநகரம் இதுவாகும்.

முன்னதாக வியாழக்கிழமை, தேசிய தலைநகரான காபூலுக்கு தென்மேற்கே 130 கிமீ தொலைவில் உள்ள கஜினி மாகாணத்தின் தலைநகரான கஸ்னியை கைப்பற்றியது.

நேற்று (12) வியாழக்கிழமை கஜினியின் மாகாண ஆளுநர் தாவூத் லக்மணி, வார்தாக் மாகாணத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலிபான்களிடம் நகரத்தை ஒப்படைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளுனர் தனது துணை மற்றும் தலைமைத் தளபதியுடன் வார்டக் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு நிராயுதபாணியாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கஜினி மாகாண சபையின் தலைவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார், கஜினியின் ஆளுநர் தலிபான் தளபதி அபுபக்கருடன் விவாதித்ததைத் தொடர்ந்து நகரத்தை தலிபான்களிடம் ஒப்படைத்தார், பின்னர் தலிபான்களின் துணையுடன் காபூலை நோக்கி நகரத்தை விட்டு வெளியேறினார் என.

“அவருடன் (கவர்னர்) அவர்களுக்கு ஒரு ஏற்பாடு இருந்தது, பாதுகாப்புப் படையினருக்கு நாங்கள் அனுப்பிய பணம் அல்லது தாலிபான்களிடமிருந்து அவர் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது குறித்து எந்தப் பொறுப்பும் இருக்காது என்று அவர் நினைத்திருக்கலாம்“ என கஜினி மாகாண சபையின் துணைத் தலைவர் அமானுல்லா கம்ராணி கூறினார்.

“தற்போது கஸ்னி நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்று கஜினியின் மாகாண சபையின் தலைவர் நசீர் அகமது ஃபகிரி கூறினார்.

இதற்கிடையில், பாக்லான் மாகாணத்தின் மையப்பகுதியான புல்-இ-கும்ரியில் தலிபான்கள் வீடு வீடாகத் தேடல்களைத் தொடங்கியதாக தகவல்கள் உள்ளன.

குண்டுஸ் கவர்னர் எஹ்சானுல்லா ஒமர்சாத் மற்றும் குண்டூஸின் பொலிஸ் தலைவர் ஜபர்தாஸ்ட் சஃபி ஆகியோர் தலிபான் காவலில் உள்ளனர்.

குண்டூஸில் உள்ள அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன, குண்டுஸில் அனைத்து அரசு சொத்துகளும் மோசமான நிலையில் உள்ளன என்று குண்டுஸ் மாகாண சபையின் தலைவர் அம்ருதீன் வாலி கூறினார்.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், தலிபான்கள் ஒருவரை ஃபரா நகரில் இழுத்துச் சென்று, அவரைக் கொல்வதைக் காட்டுகிறது.

ஃபாரா மாகாணத்தின் ஆளுனர் மற்றும் ஃபரா நகர மேயர் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகள் தலிபான்களிடம் சரணடைந்து பின்னர் அண்டை நாடான ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

முன்னதாக, ஜவ்ஜான் மாகாணத்தின் மாகாண சபையின் தலைவரும் தனது 12 துப்பாக்கிதாரிகளுடன் தலிபான்களுடன் சேர்ந்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும்: பிரதமருக்கு சுமந்திரன் ஆலோசனை

Pagetamil

தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை; நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்பு!

Pagetamil

உக்ரைனின் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் தாக்குதல் குறைப்பு: ரஷ்ய படைகள் பின்னகர்த்தப்படுகின்றன!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!