24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
சினிமா

புதிய படத்தில் கமிட் ஆகிய வனிதா விஜயகுமார்.

வசந்தபாலன் படத்தில் வனிதா

 இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

 இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். தொடர்ந்து, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதாவும், நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் அர்ஜுன் சிதம்பரம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

‘‘சமந்தா விவகாரத்தில் நான் குற்றவாளியாக கருதப்படுவது ஏன்?’’ – நாக சைதன்யா ஆதங்கம்

Pagetamil

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

Leave a Comment