வனிதாவை விட்டு வைக்காத நெட்டிசன்கள்.

Date:

வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ். வனிதா விஜயகுமார் தற்போது கோலிவுட்டில் பிசியோ பிசி. அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்துள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து பிக்கப் டிராப் படம் பண்ணுகிறார். தற்போது தான் தெலுங்கு நடிகர் நிரோஸுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புது பிரஜெக்ட், விரைவில் வருகிறது, யூகித்துக் கொண்டிருங்கள் என்றார். அந்த புகைப்படத்தை பார்த்த வனிதாவின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்கா, மொத்தம் எத்தனை படத்தில் நடிக்கிறீர்கள். தினம், தினம் அறிவிப்பு வருகிறதே என கூறப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளவாசிகள் வனிதாவை கலாய்த்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, நிஜ வாழ்க்கையில் நியூ பிரஜெக்ட் போன்று. லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே. இவர் தான் உங்களின் 4 வது கணவரா, சின்னப் பையன் மாதிரி இருக்காரே. பழைய பிரஜெக்ட் உயிருடன் இருக்கிறதா? மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட் கிடைத்துவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக பவர் ஸ்டார் தான் வனிதாவின் 4 வது கணவர் என்று பேச்சு கிளம்பியது. அதற்கு வனிதா கூறியதாவது, நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்வேன். அது என் இஷ்டம் என்று சொல்லப்படுகிறது. பிக்கப் டிராப் படத்திற்காக வனிதாவும், பவரும் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்களுக்கு நிஜமாகவே திருமணமாகிவிட்டதாக நினைத்துவிட்டனர். 

spot_imgspot_img

More like this
Related

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில்...

இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர்...

அந்தோனியார் ஆலயத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளரின் சடலம்!

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்