27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
சினிமா

தல ரசிகர்கள் பெருமிதம்…

வலிமை பட அப்டேட் வருமா என்று ஏங்கிக் கிடந்த காலம் மலையேறிவிட்டது. அஜித் நடிக்க வந்து 30 வருடங்கள் கொண்டாடும் விதமாக வலிமை படத்தில் வரும் “வேறு மாறி”  பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய வேறு மாறி பாடலை எழுதியவர் உங்கள் விக்னேஷ் சிவன்.

வேறு மாறி பாடல் வரிகள் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தொடர்ந்து விக்னேஷ் சிவனை கொண்டாடுகிறார்கள். வேற மாறி பற்றி அஜித் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, செம லிரிக்ஸ். நிறைய இடத்தில் தலயோட லைஃபை காமிச்சிருக்கீங்க. மொத்த பாடலும் வேற மாறி இருக்கு ப்ரோ என்று கூறப்பட்டுள்ளது. “மேல இருக்குறவன நம்ப நல்லா கத்துக்கோ” என்கிற வரி மிகவும் பிடித்திருக்கிறது. எளிமையாக அதே சமயம் மிகவும் அர்த்தமுள்ள பாடல் வரிகள். தல தன் ரசிகர்களுக்கு எதையெல்லாம் சொல்கிறாரோ அதையே பாடலாக எழுதிய விக்னேஷ் சிவனுக்கு நன்றி என்று அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தல நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதற்கு இதை விட சிறப்பான ட்ரீட் இருக்க முடியாது. வீடியோவில் தலயை பார்த்து கண் கலங்கிவிட்டது. தல செம ஃபிட்டாக இருக்கிறார். டான்ஸர்கள் அனைவருக்கும் அவர் கை கொடுத்ததை பார்த்தபோது தல மீதான மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இது போதும், எங்களுக்கு இது போதும் என்று ரசிகர்கள் கூறினர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil

Leave a Comment