பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த 29 ம் தேதி திருமணம் நடந்தது. உலக நாயகன் கமல் ஹாசன் தாலியை எடுக்க கன்னிகா கழுத்தில் கட்டினார் சினேகன். சினேகனின் திருமணம் தாமதமாக அவர் மட்டும் அல்ல நானும் தான் காரணம் என்று கமல் கூறினார். மேலும் சினேகன், கன்னிகா விரைவில் பெற்றோராக வேண்டும் என்று வாழ்த்தினார்.
திருமணம் முடிந்த கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு தேனிலவுக்கு செல்வார் சினேகன் என்று எதிர்பார்த்தால் அவர் உல்டாவாக செய்துவிட்டார்.
கன்னிகாவுடன் விமானத்தில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சினேகன் கூறியிருப்பதாவது,
திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.
திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ … என கூறியுள்ளார்.
மேலும், காதலியே .. மனைவியாய் ..
மனைவியே..காதலியாய் ..
அமைவது பெரும் வரம்.
அந்த வரம் எனக்கு கிடைத்துள்ளது.
சினேகனின் போஸ்ட்டுகளை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணம் முடிந்த மறுநாளே படப்பிடிப்புக்கு செல்வது எல்லாம் டூ டூ மச் சினேகன் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல் காதலே திருமணத்தில் முடிந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் கன்னிகா. 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் சினேகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் கன்னிகா.