26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பெரிய சர்ச்சை: நடுவரின் முடிவை எதிர்த்து மேடையில் குத்துச்சண்டை வீரர் போராட்டம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டது. முறையற்ற விதமாக நடுவர்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டு, பிரெஞ்சு சூப்பர்-ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் மௌரத் அலீவ், போட்டி வளையத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பிரிட்டனின் குத்துச்சண்டை வீரர் ஃப்ரேசர் கிளார்க்கிற்கு எதிரான போட்டியின் இரண்டாவது சுற்றில் மௌரத் அலீவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

26 வயதான அலீவ் பின்னர் போட்டி வளையத்தின் அருகில் உட்கார்ந்து, தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதிகாரிகள் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

“எனக்கு நடந்த அநீதியை எதிர்த்து நான் அமர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

“நான் இந்த விளையாட்டுகளுக்கு நான்கு வருடங்கள் தயார் செய்தேன். அநீதிக்கு எதிராக நான் உண்மையில் போராட விரும்பினேன், அதனால் அந்த முடிவை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்ட இதுவே எனது வழி.”

அவர் மேலும் கூறியதாவது: “என்ன நடந்தது என்பதை அறிய நீதிபதிகள் ஒன்றாக விவாதிக்க சென்றனர். நான் வெற்றி பெற்றிருப்பேன் என்று அவர்கள் கூறினார்கள், இருப்பினும் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருந்தது, எனவே முடிவை எடுக்காமல் இருக்க முடியாது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது.” என்றார்.

போட்டிகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு நடுவர் தனக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கத் தவறிவிட்டார் என்று அலீவ் கூறினார்.

“நான் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நிறுத்தப்பட்டேன், ‘நீங்கள் தோற்றீர்கள்’ என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே இது நாசகார செயல் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

இருவருக்குமிடையில் ஆக்ரோசமாக மோதல் இடம்பெற்றது.

இரண்டாவது சுற்றில் கடுமையான மோதல் நீடித்த போது, சர்ச்சைக்குரிய வகையில் நடுவர் ஆண்ட்ரூ முஸ்டாச்சியோவால் நிறுத்தப்பட்டது.

கிளார்க்கின் இரு கண்களுக்கும் மேல் வெட்டுக்காயங்கள் இருந்ததால் அலீவ் தலையை அதிகமாக பயன்படுத்திய குற்றவாளியாக கருதப்பட்டார்.

கிளார்க் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 26 வயதான அலீவ் கோபமடைந்து கோப உணர்வுகளை தெளிவுபடுத்தினார்.

அலீவ் உடனடியாக ரிங்சைட் கமரா ஒன்றைத் தாக்கி, “இல்லை” என்று மீண்டும் மீண்டும் கத்தினார்.

இரு கண்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்த எதிராளி கிளார்க், நிலைமையை “குழப்பமான” என்று அழைத்தார்.

“நடுவர் தனது முடிவை எடுத்தார், அதைத் தான் அவர் செய்ய வேண்டும். இங்கே ஒரு பெரிய நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் செய்வதை நாங்கள் நம்ப வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் சரியானதாகக் கருதும் அனைத்தையும் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

கிளார்க் அலீவை அமைதிப்படுத்த முயன்றார்.

எனினும், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக அலீவ் போராட்டத்தில் ஈடுபட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment