Site icon Pagetamil

ப்ரியா பவானி சங்கருக்கு அடித்தது ஜாக்பாட்!

மித்ரன் ஜவஹர் படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா, ராஷி கன்னா.

தனுஷை வைத்து குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். மீண்டும் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். டி 44 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் மூன்று ஹீரோயின்களாம்.

அடேங்கப்பா, மூன்று ஹீரோயின்களா என்று ரசிகர்கள் வியந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு ஹீரோயின்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளது. ராஷி கன்னா மற்றும் ப்ரியா பவானி சங்கர் மக்கள் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்களாம்.

ராஷியும், ப்ரியா பவானி சங்கரும் தனுஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இருவருக்குமே வெயிட்டான கதாபாத்திரம் என்று வழங்கப்படுகிறது.

தனுஷ், மித்ரன் ஜவஹர் 4 வது முறையாக கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 5 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

இந்த படம் தவிர்த்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ராயன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ம் தேதி தொடங்குகிறது. தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தனுஷின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தி தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது. அதில் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version