25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

பெண்களே!உங்க பிறப்புறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிந்து கொள்ளுங்கள்!

இந்த அறிகுறிகள் இருந்தா உங்க பிறப்புறுப்பு ஆரோக்கியமானது …..

பெண்களுக்கு பிறப்புறுப்பு ஆரோக்கியம் குறித்து எப்போதும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். பிறப்புறுப்பு ஆரோக்கியத்துக்கு என பல வழிமுறைகள் உள்ளன. அந்த வழிகளை பின்பற்றி யோனி ஆரோக்கியம் பின்பற்றப்படும். அப்படி உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக உள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க …

பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து பல செய்திகளில் நாம் படித்திருப்போம். ஆனால், உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக உள்ளதா அல்லது ஆரோக்கியமற்றதாக உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது என்று யாரும் படித்திருக்க மாட்டோம். உங்கள் பிறப்புறுப்பு பகுதியின் இயல்பு என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்து உள்ளீரா …? இல்லையெனில் அது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. சரி வாங்க, பிறப்புறுப்பு ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான பிறப்புறுப்பின் அறிகுறிகள்

பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சாதாரண திரவ வெளியேற்றம்

பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவ வெளியேற்றம் பொதுவானது தான். இதனைக் கொண்டு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய கணிக்க முடியும். இந்த திரவ வெளியேற்றம் பிறப்புறுப்பு மற்றும் கருப்பை வாயில் உள்ள சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது போன்ற திரவ வெளியேற்றம் ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண் வேறுபடும். இது தெளிவான பால் போன்ற நிறத்தில் இருக்கும். சாதாரண திரவ வெளியேற்றம் இந்த நிறத்தில் தான் இருக்கும். அதேபோல் சாதாரண திரவ வெளியேற்றத்தில் உங்களின் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாது. அசாதாரண நிறம் மற்றும் அசாதாரண வாசனையைக் கொண்டு உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமற்று இருக்கிறது என்று அர்த்தம்.

அரிப்பு இல்லாத பிறப்புறுப்பு

ஆரோக்கியமான பிறப்புறுப்பில் அரிப்பு இருக்கக் கூடாது. அப்படி அரிப்பு இருந்தால் உங்களின் பிறப்புறுப்புப் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும். அடிக்கடி பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், மாதவிடாய் நின்று போகும் சமயம், எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களை பிறப்புறுப்பில் பயன்படுத்துவது, சில தோல் சார்ந்த கோளாறுகள் அல்லது பால்வினை நோய்களின் பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படலாம். பிறப்புறுப்பு அரிப்பால் யோனிப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தில் சிவந்து போதல், வீக்கத்துடன் எரியும் உணர்வு இருந்தால் அது ஆரோக்கியமான பிறப்புறுப்பின் அடையலாம் அல்ல.

மணமற்ற பிறப்புறுப்பு

உங்களின் பிறப்புறுப்பில் கடுமையான மற்றும் விரும்பத்தகாத வாசனை இருந்தால், பிறப்புறுப்பின் ஆரோக்கியம் கெட்டுள்ளது என்று அர்த்தம். அவ்வாறான வாசல் இருந்தால் நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். அதேவேளையில் கர்ப்பம், மாதவிடாய் நின்று போகும் சமயம் மற்றும் மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கூட பிறப்புறுப்பில் ஏற்படும் வாசனையை மாற்றும் என்பதை நினைவில் கொள்ளவும்.

வலி இல்ல உடலுறவு.

உடலுறவின் போது போதுமான உயவு இல்லாவிட்டால், உடலுறவின் போது வலியை அனுபவிப்பீர்கள். அதுமட்டுமின்றி, யோனிஸ்மஸ், நோய்த் தொற்றுகள் அல்லது கர்ப்பப்பைவாய்ப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் பெண்கள் உடலுறவின் போது தீவிர வலியை அனுபவிக்க முடியும். ஆனாலும், உடலுறவின் போது நீங்கள் பிறப்புறுப்பு பகுதியில் வலியை அனுபவிக்கவில்லை எனில், உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக உள்ளது.

வலி ஏற்படுவதில்லை

பலவிதமான நோய்த் தொற்றுக்கள் உங்கள் பிறப்புறுப்பு பகுதியை பாதிக்கலாம். இதனால் பிறப்புறுப்பில் வலி அல்லது வெப்பம் ஏற்படும். இதுபோன்று இருந்தால், உங்களின் மகப்பேறு மருத்துவரை சந்தித்து அதற்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

பிறப்புறுப்பின் தோல் பகுதி மிகவும் மென்மையானது. எனவே, பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பிறப்புறுப்பின் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆரோக்கியமான ஆரோக்கியமே ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment