27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
சினிமா

பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு:

பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு:

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் தன்னுடைய அப்பா தியாகராஜன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தில் கார்த்திக், சிம்ரன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டத்து, தேசிய விருதுகளை பெற்ற ‘அந்தாதூன்’ படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ’அந்தாதூன்’படத்தின் தபு கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அந்தாதூன்’ படத்தின் தமிழில் ரீமேக்கை கைபற்றிய தியாகராஜன் இந்த படத்தை தனது மகன் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டார். அதன்படி இந்த படத்தை இயக்க ஆரம்பத்தில் இயக்குநர் மோகன் ராஜிடம் பேச்சுவார்த்தை
நடந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக்கிடமும் பேச்சு வார்த்தை நடந்தது.

இவர்கள் யாரும் அந்தகன் திரைப்படத்தை இயக்க முன் வராததால், தியாகராஜனே தன்னுடைய மகனை வைத்து படம் இயக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினார்கள். தமிழுக்காக அந்தாதூன் படத்தில் ஒருசில மாறுதல்களையும் செய்துள்ளார் தியாகராஜன். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனியும்,
வனிதா விஜயகுமார் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கபட்ட அந்தகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் அந்தகன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment