பணம் முக்கியம் இல்லை… விஜய் படம் தான் முக்கியம்..
”விஜய் சாரை ‘மாஸ்டர்’ ஷூட்டிங்ல பார்த்தப்போ கடவுளையே பார்த்த ஒரு பதற்றம்!” – ‘திருமகள்’ சங்கீதா…
” ‘மாஸ்டர்’ படத்துல முதல்ல ஶ்ரீநாத் மனைவியா நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. ஏன்னு தெரியலை, அப்புறமா அந்த சீனை மாத்திட்டு, டாக்டர் கேரக்டர் தந்துட்டாங்க.
”ஆக்சுவலி, நான் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான்…” சத்தம்போட்டு சிரிக்கிறார் சங்கீதா. ‘திருமகள்’ சங்கீதா என்று சொன்னாள்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சங்கீதாவுக்கோ சஞ்ஜு என அழைத்தால்தான் பிடிக்கும்!
” ‘அடப் போங்க, முக்கால்வாசிப் பேர் இதையேதான் சொல்றாங்க’ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. ஆனா, என் விஷயத்துல உண்மை இதுதான். சொந்த ஊர் பெங்களூரு. ஆனா, கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிட்டோம். ‘பேரழகி’ங்கிற சீரியல் ஆடிஷனுக்காக என் ஃப்ரெண்ட் வந்தா. அவளுக்கு கம்பெனி கொடுக்க நானும் சென்னை வந்தேன். ஆனா, ஆடிஷன் ஸ்பாட்டுல டைரக்டர் என்னை பார்த்துட்டு அந்த சீரியல்ல நடிக்க வச்சிட்டார். ஆக்சிடென்ட்னு சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சா?
ஆனா பாருங்க, நான் டிவிக்குப் போறது வீட்டுல யாருக்கும் பிடிக்கல. ‘நமக்கெல்லாம் இது செட்டாகுது’ன்னு சொன்னாங்க. அம்மாட்ட இருந்து மட்டும் கொஞ்சம் சப்போர்ட் கிடைச்சது. அந்தக் கொஞ்ச ஆதரவைப் புடிச்சிக்கிட்டு, ஒன்றரை வருஷம் போராடி மத்த எல்லாருக்கும் புரிய வச்சேன்” என்றவரிடம், ‘வெள்ளித்திரை என்ட்ரி’ குறித்துக் கேட்டேன்.
சங்கீதாவின் ” ‘சாதனை பயணம்’
நான் நடிச்ச முதல் படம். ஆனா, இன்னும் ரிலீஸ் ஆகலை. ரிலீசான முதல் படம் ‘செவன்’. தொடர்ந்து ‘சுல்தான்’, ‘மாஸ்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’னு சில படங்கள்ல நடிச்சேன். இன்னும் சில படங்கள் ரிலீஸாக வேண்டியிருக்கு. பெரிய நடிகர்களின் படங்கள்ல வாய்ப்பு கிடைச்சப்ப, ‘அவங்க கூட நம்மால பேச முடியுமா, நாம பேசினா அவங்க பதிலுக்குப் பேசுவாங்களா’னு நினைச்சிருக்கேன். ஆனா, எல்லா நடிகர்களுமே நினைச்சதுக்கு நேர்மாறா சகாயமாக பேசினது வியப்பா இருந்தது” என்கிறார்.
”சரி, ‘மாஸ்டர்’ அனுபவத்தைச் கொஞ்சம் சொல்லுங்க.
” ‘சுல்தான்’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து ஸ்ட்ரெய்ட்டா ‘மாஸ்டர்’ பட ஷூட்டிங் கிளம்ப வேண்டிய சூழல். அதாவது திண்டுக்கல்ல இருந்து டெல்லிக்குப் போகணும். 6.30 மணிக்கு ஃபிளைட். ஆனா, அந்த ஃபிளைட்டையே மிஸ் பண்ணிட்டேன். அந்த செகண்ட் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்களேன்? ஒரே பதற்றமாகிடுச்சு. நல்ல வாய்ப்பு அவ்வளவுதானானு நினைச்சுப் பார்த்தப்ப அழுகை அழுகையா வந்திடுச்சு. ஆனாலும், அந்த நேரத்துலயும் மனசுக்குள் ஒரு தைரியம். எப்படியும் ஷூட்டிங் போயே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்.
வீட்ல எல்லோருமே விஜய் சார் ரசிகர்கள்… அப்புறம் எப்படி விஜய் சார்கூட நடிக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணமுடியும்? சொந்தக் காசைப் போட்டு அடுத்த ஃபிளைட்டைப் பிடிச்சு டெல்லிக்குப் போயிட்டேன். பணமாங்க முக்கியம், தளபதி பட வாய்ப்புங்க” என்றவர் தொடர்ந்தார்.
”முதல்ல ஶ்ரீநாத் மனைவியா நடிக்கத்தான் கூப்பிட்டாங்க. ஏன்னு தெரியலை, அப்புறமா அந்த சீனை மாத்திட்டு, டாக்டர் கேரக்டர் தந்துட்டாங்க. விஜய் சார்கூட நடிக்கிறேன்னு அவ்வளவு சந்தோஷம். சீன்ல என் படபடப்பைப் பார்த்துட்டு, இயல்பா பேசி படபடப்பை குறைச்சார். நேர்ல கடவுளைப் பார்த்தா எப்படி ஒரு பதற்ற இருக்குமோ அந்த மாதிரி ஒரு பதற்றம் இருந்துச்சு. ஆனா, அவர் பேசினதும் அதெல்லாம் மறைஞ்சிடுச்சு” என்றவருக்கு, ரஜினி, கமல் படங்களில் நடிக்க வேண்டுமென்கிற ஆசையும் இருக்கிறது என்றார்.
”இன்னொரு ஆசையும் இருக்கு. அது, ‘நதியா’ மேடம் மாதிரி மக்கள் மனதில் நிற்கிற கதாபாத்திரங்களில் நடிக்கணும்” என்கிறார்