விஜய்க்கு ஜோடியாகும் ஹன்சிகா!

Date:

விஜய்க்கு ஜோடியாகும் ஹன்சிகா!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

ஹன்சிகா தன் 50வது படமான மஹாவில் நடித்து முடித்துவிட்டார். யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கும் மஹா படத்தில் ஹன்சிகாவின் காதலராக அவரின் முன்னாள் காதலரான சிம்பு நடித்திருக்கிறார். அதனாலேயே படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

இந்நிலையில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து நடிக்குமாறு ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். கதையை கேட்ட ஹன்சிகா, கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மில்டன், விஜய் ஆண்டனி கூட்டணி சேரும் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கிறது.

இதற்கிடையே இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி தான் இயக்கவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று வெளியானது.

 

  • தான் இதற்கு முன்பு எந்த இயக்குநரிடமும் உதவியாளராக இல்லாதபோதிலும் பிச்சைக்காரன் 2 படத்தை சிறப்பாக எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோத சொத்து குவிப்பு: யாழில் விற்பனை நிலையத்தில் சோதனை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின்...

வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் சிரிய தலைவர்!

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்