27.4 C
Jaffna
October 1, 2022
சினிமா

‘போதும் நிறுத்துங்கள் என கதறினேன்… அவர் நிறுத்தவில்லை’: ஷில்பா கணவன் மீது கவர்ச்சி நடிகைகள் புகார்!

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தன் வீட்டிற்கே வந்து தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஷெர்லின் ஷோப்ரா போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்து, விநியோகித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து ராஜ் குந்த்ராவால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக பல மாடல் அழகிகள், நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜ் குந்த்ரா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா. அவர் கடந்த 27ஆம் திகதி மும்பை கிரைம் பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி ஆபாச பட வழக்கு குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ராஜ் குந்த்ரா மீது கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்தார் ஷெர்லின். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

ஷெர்லின் சோப்ரா தன் புகார் மனுவில் கூறியிருந்ததாவது,

2019ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என் மேனேஜரை தொடர்பு கொண்டு ஒரு ப்ராஜெக்ட் குறித்து பேச வேண்டும் என்றார். 27.03.2019 அன்று பிசினஸ் மீட்டிங் நடந்தது. அதன் பிறகு முன்னறிவிப்பு எதுவுமின்றி ராஜ் குந்த்ரா என் வீட்டிற்கு வந்தார்.

மெசேஜ் மூலம் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அவர் என் வீட்டிற்கு வந்தார். நான் தடுத்தும் கேட்காமல் என்னை முத்தமிடத் துவங்கினார் ராஜ் குந்த்ரா. திருமணமான நபருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. உங்கள் மனைவி
ஷில்பா ஷெட்டி என்னாச்சு என்று நான் ராஜ் குந்த்ராவிடம் கேட்டேன்.

அதற்கு அவரோ, அது சிக்கலானது, நான் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் ஒரே ஸ்ட்ரெஸ் தான் என்றார். ராஜிடம் இருந்து தப்பியோடி பாத்ரூமுக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டேன். அவர் கிளம்பும் வரை வெளியே வரவில்லை. பயமாக இருக்கிறது, நிறுத்துங்கள் என்று நான் மீண்டும் மீண்டும் கூறியும் ராஜ் கேட்கவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மற்றொரு கவர்ச்சி வெடிகுண்டு பூனம் பாண்டேயும் ராஜ் குந்த்ரா மீது குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தன் குழந்தைக்கு அழகான பெயரை வைத்த சிவகார்த்திகேயன்!

divya divya

நண்பர்களுக்காக எப்போதும் இருப்பவர் விஜய்: மாளவிகா மோகனன்!

divya divya

அர்ஜுனுக்கு எதிரான பாலியல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!