29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வவுனியா வடக்கில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!

வவுனியா வடக்கில் இன்று கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் முதற்கட்டமாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள 76 பாடசாலைகளை சேர்ந்த 1000 ஆசிரியர்களிற்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் 60 வயதிற்கு மேற்பட்ட 500 பேருக்கு இன்றையதினம் புளியங்குளம் மற்றும் நெடுங்கேணி வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராணுவம் மற்றும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு வைத்திய அதிகாரி வி.திலீபன் மற்றும் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜெயா, சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment