அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைத்த நிதி சீராக்கல் சட்டமூலத்தில் 7 திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலத்தின் 7 சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1