வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கதுரை ஆகியோரின் 38வது நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை போட்டு விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.
இதில் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா,தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1