29.4 C
Jaffna
September 23, 2021
கிழக்கு

பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!

பெற்றோர்களுடன் சுற்றுலா சென்ற சிறுவன் கால்வாயில் கால் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பொத்தானையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ரகுமானியா வீதி பாலை நகர் தியாவட்டவானைச் சேர்ந்த றிபாஸ் முகமட் ஆசிக் வயது (12) என்ற 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமையன்று (24) பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொத்தானை வயல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மதிய உணவினை உட்கொள்ள தயாரான போது, சிறுவன் காணாமல் போயிருந்ததை அவதானித்து, தேடியபோது அருகில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் விழுந்து கிந்ததை அவதானித்து, அவரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இதன்போது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். மரணவிசாரணைகளை கோறளைப்பற்று பிரதேச திடிர் மரணவிசாரனை அதிகாரி வ.றமேஸ்ஆனந்தன் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது நீரில் மூழ்கியதால் மூச்சு திணனறி உயிரிழந்துள்ளதாகவும் உடற் கூற்றாய்வின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்குமாறு மரணவிசாரனை அதிகாரி பொலிசாரை பணித்திருந்தார்.

தற்போது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தனியார் கல்வி நிலையங்கள் இரகசியமாக இயங்குமாயின் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும்

Pagetamil

அமைச்சு பதவிக்காக 20ஐ ஆதரிக்கவில்லை; பசில் வல்லவர்; அதனாலேயே கூட்டமைப்பும் பேசப் போகிறது: ஹரீஸ் எம்.பி!

Pagetamil

அக்கரைப்பற்று பிரதேச சபையில் அனுதாபம் தெரிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!