25.8 C
Jaffna
January 31, 2023
சினிமா

கார் விபத்து: நண்பி பலி; குடிபோதையில் செலுத்திய நடிகை யாஷிகா படுகாயம்!

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகாவின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் குடிபோதையில் கார் ஓட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவலை வேண்டாம் படம் மூலம் நடிகையான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் பலரையும் கவர்ந்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது யாஷிகாவுக்கு மகத் மீது காதல் ஏற்பட்டது. அந்த காதல் டிராக்காலும் பிரபலமானார்.

தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் யாஷிகா தன் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த பவானி(28), 2 ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு காரில் சென்றிருக்கிறார். அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளனர்.

காரை யாஷிகா தான் ஓட்டி வந்திருக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு பகுதியில் வந்த போது கார் நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் பவானி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகா மற்றும் இரண்டு நண்பர்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டனர். படுகாயம் அடைந்த யாஷிகாவும், அவரின் நண்பர்களும் அடையாறில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாஷிகாவின் நிலைமை க்ரிட்டிகலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரை ஓட்டி வந்த யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடிபோதையில் கார் ஓட்டியது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

காரில் பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக் கொண்டே வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கார் விபத்தில் பலியான பவானி அமெரிக்காவில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நயன்தாராவை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர்!

Pagetamil

‘குடிமகான்’ படத்தில் சாந்தினி தமிழரசன்

Pagetamil

‘காதலுக்கு வயசெல்லாம் கிடையாது’: சின்னப்பையனுடனான காதலுக்கு மாஸ்டர் நாயகி விளக்கம்!

Pagetamil

உடலை மறைக்க ஆடை கொடுத்த இளம்பெண்… சூடான நடிகை!

Pagetamil

பள்ளி நண்பரை மணக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!