Site icon Pagetamil

வனிதா மீதான காதலை வெளிப்படுத்திய பவர் ஸ்டார்!

வனிதாவுக்கும் எனக்கும் திருணம் நடப்பது ஆண்டவன் கையில் உள்ளது என்று கூறியுள்ளார் பவர்ஸ்டார்.

மூன்று தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார் மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க்காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம் என்று அதிரடியாக கூறினார்.

வனிதாவை தொடர்ந்து பேட்டியளித்த பவர்ஸ்டார், ஒரு போஸ்டர் வைரலாக பரவியிருக்கிறது. கல்யாணம் ஆவதெல்லாம் கடவுள் கையில் தான் உள்ளது. எனக்கும் வனிதாவுக்கும் திருமணம் ஆவதும் ஆண்டவன் கையில்தான் உள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே அந்தப்படம் வெளியிடப்பட்டது. பலரின் வாழ்த்து உண்மையானால் சந்தோஷம்தான் என்றார்.

Exit mobile version