29.5 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

எல்லை நிர்ணயம் 2021: விசேட கலந்துரையாடல்!

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கம் எல்லை நிர்ணயம் மேற்கொள்வதற்காக வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளை உருவாக்குதல், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குதல், பிரதேச செயலக எல்லைகளை விஷ்தரித்தல் போன்றவற்றின் அடிப்படையில் அந்தந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுவின் சிபாரிசுடன் பிரதேச செயலாளர்களால் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (24) காலை10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்வைத்த முன்மொழிவுகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
சிக்களுக்குரிய பிரதேச எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சில எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும், இன்னும் சில அந்தந்த பிரதேச செயலக மட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சமூக உயர்மட்ட பிரிவினரின் பங்குபற்றலுடன் தீர்த்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர் நகர்,ஏறாவூர்பற்று,கோறளைப்பற்று மத்தி,கோறளைப்பற்று மேற்கு, போன்ற பிரதேச சபை எல்லைகள் தொடர்பில் இரு சமூங்கங்களுக்கு மத்தியில் இணைக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண்பதெனவும் ஆலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணி பகிர்வு செய்யப்படவில்லை என்பதனை புள்ளி விபர ரீதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் முன்வைத்தார்கள். ஆகவே பிரதேச செயலக ரீதியாக இருக்கின்ற பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வினை காணும் சந்தர்ப்பமாக இவ் எல்லை நிர்ணய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரும் இன வேறுபாடற்ற முறையில் சுமுகமாகவும், பரஸ்பர புரிந்துணர்வோடும் மாவட்டத்தின் நிலைமைகளை ஆழமாக கலந்துரையாடியும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுறை சந்திரகாந்தன், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் (ஜனா), இரா.சாணக்கியன் மற்றும் அரசாங்க அதிபர் க.கருணாகரன், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், காணி உத்தியோகத்தர்கள், போன்ற பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment